பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

9


என்ற காரணம் கூறுவீர்கள். இந்தப் பழக்கத்தைக் கையாண்டு திருடர்களைப் பிடித்து தண்டித்து என்ன நன்மையைக் கண்டோம்? இப்பொழுது என்னிடமிருந்த கொஞ்ச ரூபாய் களவு போனதுதான் கண்ட பலன். பழைய நடைமுறையானது திருட்டைத் தடுக்கவில்லை. அதனால் என்ன உண்டாகிறது? திருடன் சில ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு அவதியுறுகிறான். பிறகு, தண்டனைக் காலம் முடிந்து, முன்னைக்காட்டிலும் தீயவனாக வெளியே வருகிறான். பிறகு வேலை இல்லாமல் திண்டாடுகிறான், மீண்டும் பழைய திருட்டுத் தொழிலையே சாமர்த்தியமாகச் செய்ய முற்படுகிறான் இவ்வளவுதான். திருடனைப்பிடித்துத் தண்டிப்பதற்காக உள்ள நடைமுறைகளைப் பார்த்தால், இந்தத் தொல்லையே வேண்டாம் என சும்மா இருந்து விடுவது நல்லதாகத் தோன்றுகிறது. ஏனெனில் புகார் எழுதிக்கொடுத்து, வழக்குத் தொடுத்து, சாட்சியங்களைக் காட்டி தொல்லைப்படுவதைவிட, அந்த நேரத்தை பயனுள்ள முறையில் கழித்து, அந்த ரூபாயையும் சம்பாதித்துக் கொள்ளலாம்” என்று கூறினார் ஷா.

தப்பியோடிய கைதிக்கு அனுதாபம்

“சிறையிலிருந்து கைதி ஒருவன் தப்பி ஓடிவிட்டான். அவனைக் காவலர்கள் மீண்டும் பிடித்து, தண்டனை கொடுத்தனர்” என்ற செய்தி பத்திரிகையில் வெளிவந்தது.