பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அதைக் கண்ணுற்ற ஷா, பத்திரிகாசிரியருக்கு பின்வருமாறு எழுதினார்:

“சிறை அதிகாரிகள் தங்களுடைய கவனக் குறைவுக்காக கைதியைக் காட்டுமிராண்டித்தனமாக பழி வாங்குகிறார்கள். அந்தக் கைதி முன்பு தண்டிக்கப்பட்டது சிறையில் அடைக்கப்படுவதற்காகவே தவிர, தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. பிறர் காவல் புரியும்போது, அதிலிருந்து கைதி தப்பித்துக் கொள்வதற்கு உரிமை உண்டு. விளையாட்டுத் துறையில் உள்ள சாதாரண அறிவுகூட இதை உணர்த்தக்கூடும். தவிர, பொதுமக்களின் பணம், இரும்புக் கம்பிகள், தாழ்ப்பாள், துப்பாக்கிகள், காவலாளிகள், வேலி அடைப்பு கைதிக்கான தனி உடை இவ்வளவும் சிறை அதிகாரிகளுக்குத் துணையாகவும், ஒரு திக்கற்ற நிர்க்கதியான மனிதனுக்கு எதிராகவும் இருந்ததை உணர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மூன்று நாட்கள் வீணாகும்

ஷாவின் அன்பர் ஒருவர், தான் அளிக்கும் சிறந்த விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதற்கு ஷா.

“நான் ஞாயிற்றுக் கிழமையிலும் ஓய்வின்றி வேலை செய்பவன். என் வாழ்க்கையில் மீதமுள்ள நாட்களில் நான்