பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


கொடுத்து வாங்கும்போதே முற்ற கட்சிப் பத்திரிகை ஒன்றையும் வாங்கிப் படிப்பதே கடமை. அப்போதுதான் கண்மூடிப்பின்பற்றும் அறியாமை நீங்கும்"

எழுத்தாளன் யார்?

“எவன் தன்னைப் பற்றியும் தான் வாழும் காலத்தைப் பற்றியும் எழுதுகின்றானோ அவனே எல்லா மக்களைப் பற்றியும் எல்லாக் காலத்தைப் பற்றியும் எழுதும் எழுத்தாளன் ஆவான்.”

உழைப்பே இனிமை

“சமுதாயத்துக்கு என் வாழ்க்கை உரிமையுடையது. ஆகவே, சமுதாயத்துக்கு இயன்ற அளவு உழைப்பதே என் கடமை.

உயிர் இருக்கும் வரையிலும் உழைத்துச் சாக விரும்புகிறேன். உழைக்க உழைக்கத்தான் எனக்கு வாழ்க்கை இனிக்கிறது”.

விலை மதிப்புள்ள உயிர்

அறிவற்ற குண்டுவீச்சுக்கு எதிரே நின்று மனிதன் தன் உயிரைப்பலியாக்குவது அறியாமை என்பது ஷாவின் கருத்து.