பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

13


என்னிடம் அஞ்சாமை இருக்கிறது நெறியான முறையில் எந்த அளவுக்கும் அஞ்சாமல் போராட என்னால் இயலும். ஆனால், ஒருவரை ஒருவர் சுடுவதற்கும், தாக்குவதற்கும் முனைந்தபோது, நான் கோழையாக விலகி, என் படுக்கை அறையில் ஒதுங்கி இருப்பேன். சுட்டுப் பொசுக்கக்கூடிய அளவுக்கு என் உயிர் விலைமதிப்பற்றது அல்ல"


கற்றுக்கொண்டது என்ன?

“நான் படித்தப் பள்ளிக் கூடத்தில், என்னைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் இல்லை. ஆகவே, பள்ளிக்கூடத்தில் நான் ஒன்றுமே கற்றுக் கொள்ள இயலவில்லை”


நானே ஆசிரியர்; நானே மாணவன்!

“எழுத்துத் தொழிலை, எனக்கு நானே ஆசிரியனாக இருந்து பயிற்றுவித்து வந்ததால், ஆராய்ச்சிமிக்க ஆசிரியரிடம் பயிலத் தொடங்கி, தன்னம்பிக்கையும், மனநிறைவும் இல்லாமல் வருந்தும் மாணவனைப்போல், அவதிப்பட்டேன். அத்தகைய ஆசிரியராகிய எனக்கு, எழுத்தாளனாகிய நானே மாணவன். ஆசிரியரை ஏய்க்கவும் முடியவில்லை; மகிழ்விக்கவும் முடியவில்லை.”