பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்



இரண்டும் கெட்டான் நிலை

சீரான உடை இல்லாமலும், தபால் செலவுக்கு என்ன செய்வது என்ற நிலையில் இருந்த ஷா சோர்வு அடைந்து விடவில்லை. அதைப்பற்றி,

“புகழுக்கும், இகழ்ச்சிக்கும், கவலைப்படாத ஒருவித உணர்ச்சியற்ற தன்மையை அதனால் பெற்றேன். அந்தத் தன்மை, அந்த நாள் முதல் எனக்குப் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. அதனால் புத்தக வெளியீட்டிலும் நாடக முறையிலும் அக்கறை குறைந்தவனாக இருந்து வந்தேன். அது வளர்ந்து சில சமயங்களில் எனக்கு இடையூறாகவும் இருந்தது. தொடர்ந்து எழுத்து வேலைகளைச் செய்வதற்கும் இயலாது என்று உணரும்படியும் செய்தது. அதனால், பிற்காலத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், நெகிழவிடுவதும் ஒத்தி வைப்பதுமாகத் தவறும் செய்திருக்கிறேன்.


முரண்பாடு கண்டார்

அதிகமாகவும், நன்றாகவும் எழுத எழுத, மறுப்பும் எதிர்ப்புமே மிகுந்து வந்தன. அதற்கான காரணத்தை இறுதியில் கண்டுபிடித்தேன். என் நூல்களில், இலக்கியக்