பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

15


குறை எதையும் புத்தக நிறுவனத்தினர் சுட்டிக் காட்டவில்லை. ஆனால், மதிப்புப் பெற்றுவந்த கொள்கைகளுக்கும், சமுதாய வாழ்வுக்கும் முரண் பாடானவற்றை நான் எழுதி வந்ததே காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆயினும், உடனே என் எழுத்தை நிறுத்தவில்லை. ஐந்தாவது நாவல் எழுதிக்கொண்டிருந்த போது, பத்திரிகை உலகில் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் என் முயற்சியை நிறுத்தினேன்.”


சமுதாயத்துக்குப் புறம்பானவன்

“நான் சமுதாயத்துக்குப் புறம்பாக, அரசியலுக்கு எதிராக, விளையாட்டு அமைப்புகளுக்கு விரோதமாக, கோயிலுக்குப் புறம்பாக வெளியே வாழ்ந்து வந்தேன். பொது வாழ்க்கைக்கு முற்றிலும் வெளியே நின்று விட்டேன். ஆனால் இசை, இலக்கியம், ஓவியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளிலோ நேர்மாறாக இருந்தேன். நான் ஒருவன்தான் இவற்றுக்கு இயைந்து, இவற்றினுள் வாழ்ந்தேன்”.


சுயமதிப்போடு வாழ்ந்தவன்

“வறுமையில் ஒழுங்கின்றி வளர்ந்த காரணத்தால், வறுமை ஒரு தொல்லை என்றும், துன்பம் என்றும் உணர்ந்தபோதிலும், பாவம் என்றும், இழிவு என்றும் நான்