பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


கருதியது இல்லை. என் திறமை கலைஅறிவு, இடைவிடாத உழைப்பு முதலானவற்றை நினைத்து, சுயமதிப்போடு மகிழ்ந்து வந்தேன்”


அவர் அடைந்த மகிழ்ச்சி

எச். ஜி. வெல்ஸின் மனைவி இறந்தபோது, அவருடைய துயரத்தை மாற்றுவதற்காக ஷா அவரை, எரியூட்டும் அறைக்குள் சென்று பார்க்குமாறு கூறினார். “குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கள். அவர்களும் பார்க்கவேண்டும், அது அழகான இடம் என் தாய், இங்கே எரிக்கப்பட்டதை நான் கண்டேன். போய்ப் பார்த்த பிறகு மகிழ்ச்சியாயிருக்கும்” என்று சொல்லி, அனுப்பினார் ஷா.”

அதேபோல், போய் பார்த்துவந்த வெல்ஸ், “உண்மையாகவே அது அழகாகத்தான் இருந்தது” என்றார். அதைக்கேட்டு ஷா மகிழ்ந்தார்.


அவருடைய நம்பிக்கை

என் வயதில், என்னால் செய்ய முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறேன். என் ஆற்றலும் குறைந்து வருகிறது. நான் சீர்த்திருத்தத் துறையில் அளவு கடந்து செல்வதைக்