பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

17


கண்டவர்கள் என் ஆற்றல் குறைவதைக் கண்டு மகிழ்ச்சியும் கொள்ளலாம். ஆனால், நான் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பது வேறு. இனி வரும் இளைஞர்கள், இன்னும் பொருத்தமானவற்றையும், சிறப்பானவற்றையும் எழுதி விரைவில் என் நூல்களைப் பின்னுக்குத் தள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.”


அவர் நிலையும் அதுவே!

வறுமை நிலையிலும் கவலையற்ற தன்மை ஷாவுக்கு இயல்பாயிருந்தது. வறுமைக் காலத்தில், ஏழை ஒருவன் ஷாவின் உடையைக் கண்டு ஏமாந்து அவரை நெருங்கி “உண்மையாய்ச் சொல்லுகிறேன். என்னிடம் ஒரு காசும் இல்லை” என்று கூறி பிச்சைக் கேட்டான். அதைக் கேட்டதும்,

“நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன்” என்றார் ஷா.


இரண்டு எண்ணங்கள்

நண்பர் ஒருவரோடு போய் கடலில் குளித்துக் கொண்டிருந்தார் ஷா, எதிர்பாராமல் அலைகள், அவருடைய கால்களை இழுத்துச் சென்றன. களைப்படையும்வரை நீந்திப் பார்த்தார். இனிப் பயன் இல்லை என்று நம்பிக்கை இழந்தபோது, அவருடைய காலில் பாறை ஒன்றுபட்டது.