பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அதைப்பற்றிக்கொண்டு நின்றபோது, நீர் முழங்கால் அளவில் இருந்தது.

“அலைகளின் வேகத்தை எதிர்த்து நீந்திப் பயன் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் ஏற்படக்கூடிய முடிவை எண்ணிக் கொண்டேன். இனி, கரையேறி உயிர் பிழைக்க வழி இல்லை என்று அறிந்ததும் இரண்டு எண்ணங்கள் தோன்றின. ஒன்று என்னுடைய உயிலில் என் நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களோடு செய்யவேண்டிய உடன்படிக்கைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையே என்று எண்ணினேன்; மற்றொன்று உணவு நேரத்துக்கு நான் ஏன் வரவில்லை என்று என் மனைவி திகைப்படைவாள் என்று எண்ணினேன்.”


ஆயுள் போதாது

“மனிதனுக்கு இப்போது உள்ள ஆயுள் போதாது. மனிதன் சாகும்போது, குழந்தையைப்போல் முழுமையான அறிவு பெறாத நிலையில் இருந்தே சாகிறான். அதனால் அரசியல் முதலியவற்றில் போதிய முன்னேற்றம் அடையாமல் துன்புறுகிறான்.”


இளைஞர்களுக்கு அறிவுரை

வறுமையில் துன்புறும் இளைஞர் எவரேனும், தம்முடைய வாழ்க்கையை உதாரணமாகக்கொண்டால் கேடு உண்டாகுமே எனப்பயந்து அறிவுரை ஒன்றைக் கூறினார் ஷா.