பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்




பொறுப்பை ஏற்பவர்

“பிரிட்டனில், ‘பேபியன் சங்கம்’ என்பது பிரசித்தமானது; அரசியல் பிரமுகர்களான அட்லி, கிரிப்ஸ் முதலானோர் அரசியல் துறையில் பயிற்சி பெற்று முன்னேறுவதற்குக் காரணமானது அந்தச் சங்கமே.

அன்னிபெசன்ட் அம்மையாரும், ஷாவும் அந்தச் சங்கத்தில் உறுப்பினர்களே.

அந்தச் சங்கத்தை ஆர்வத்தோடு வளர்த்தவர்களில் ஷாவும் ஒருவர். அக்காலத்தில், அதை எப்படி வளர்த்தார் என்பதற்கு அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் எழுதிய கடிதங்களுமே போதுமான சான்றுகள் ஆகும்.

பத்திரிகைகளும், நாடக அரங்குகளும், சொற்பொழிவு மேடைகளும் அஞ்சும்படி வாழ்ந்துவந்த ஷா, பலருடைய வெறுப்புக்கும் பழிச்சொற்களுக்கும் ஆளான போதிலும் பல குழுக்களின் மத்தியில் அவர் ஒற்றுமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மிகவும் பாடுபட்டிருக்கிறார்.

பேபியன் சங்கம் இருப்தேழு ஆண்டுகள் பிளவுபடாமல் சேவை செய்ததற்கு முக்கிய காரணம் ஒற்றுமையே நோக்கமாகக் கொண்டு ஷா செய்த சிறப்பான முயற்சிகளே ஆகும்.