பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

21


செயற்குழுவில் பிளவுகளோ, சச்சரவுகளோ ஏற்படக் குறை ஏதாவது தோன்றினால், அந்தக் குறைக்குத் தாமே காரணம் என்று கூறி முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு நிலைமையை எப்படியாவது சீர்படுத்தி விடுவார்.

அவர் ஈடுபட்ட துறைகளில் எல்லாம் அவருடைய உழைப்பையும், திருத்தமுறச் செய்யும் சிறப்பையும் உணர்ந்த பலரும் போற்றினார்கள்.


வியாபாரம்போல் கருதவேண்டும்

ஷாவுக்கு நெருங்கிய பழக்கமுள்ள நடிகர் ஒருவர் இருந்தார். அவர் காலில் கடுமையாக அடிபட்டு மிகவும் வேதனையுற்றார். ஒரு காலைவெட்டி எடுக்கப்படும் நிலையில் அவர் இருந்தார்.

அப்பொழுது ஷா அவருக்கு ஆறுதலாக கடிதம் எழுதினார்.

“எனக்கு இரண்டு கால்கள் இருப்பதை எண்ணி மூன்று கால்கள் இல்லையே என்று நான் எப்பொழுதும் ஏங்கியது இல்லை. ஆகவே, நீங்கள் ஒரு கால் உள்ள நிலையில் இரண்டு கால் இல்லையே என்று ஏங்கித் துன்புற வேண்டியது இல்லையே” என்று குறிப்பிட்டார்.

“ஒரு காலை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிய ஆலேசனையின்படி நடக்கலாமா?” என்று ஷாவிடம் கேட்டிருந்தார் அந்த நடிகர்.