பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


மாணவனுக்குத் தண்டனை

ஷா எழுதியுள்ள நாடகம் ஒன்றில், ஒருவன் தன்னைப்பற்றி ஓர் இடத்தில் “நான் பெர்னார்ட்ஷாவின் மாணவன்” எனச் சொல்லிக்கொள்கிறான்.

இப்படியாக தம்முடைய நாடகத்தில், தம்மைப் புகழ்ந்து கொள்ளலாமா? என்று ஷாவிடம் ஒருவர் கேட்டார்.

“நான் வேண்டும் என்றேதான் அவ்வாறு எழுதினேன். கிரிமினல் நீதிமன்றம் ஒன்றில், இளைஞன் ஒருவனுடைய வழக்கு நடந்தபோது, அவன் தன்னைப்பற்றி இவ்வாறு சொல்லிக்கொண்டு ஆறுமாதம் தண்டிக்கப்பட்டான்” என்று காரணம் காட்டினார் ஷா.


பேசுவது வேறு

ஒரு கூட்டத்தில், ‘சவுக்கடி தண்டனை’ பற்றி ஷா பேசிக்கொண்டிருக்கையில், “நீங்கள் சவுக்கடியைக் கண்டிருக்கிறீர்களே, இராணுவத்தில் தவறு செய்கிறவர்கள், அதை விரும்பிக் கேட்கிறார்களே, அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார்.

“நான் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் சவுக்கடி தண்டனையைப் பற்றியதே அன்றி, சவுக்கடி கேட்கப்படுவதைப் பற்றி அல்ல” என்று பதில் கூறினார் ஷா.