பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


சிரமம் எதற்கு?

ஷா நோயுற்றிருக்கும்போது, பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி, “உங்களுக்கு என்ன நோய் என்பதை பொதுமக்கள் அறிய விரும்புகின்றனர்” என்று கேட்டனர்.

“ஏன் இவ்வளவு சிரமம்? ஷா இறந்துவிட்டதாகச் சொல்லிவிடுங்கள். அதனால் எனக்கு எவ்வளவோ தொல்லைகள் குறையும்” என்றார் ஷா,


மூளை மங்கியது ஏன்?

“சிறுவர்களை நன்றாக அடித்தால் தான் சொற்களையும் தொடர்களையும் மனப்பாடம் செய்வார்கள்” என்று புகழ்பெற்ற அறிஞர் டாக்டர் ஜான்சன் ஒரு சமயம் கூறினார்.

அவர் கூறியதை மறுத்து, “ஜான்சனின் ஆசிரியர் அவரைக் கொடுமையாக நடத்தியிருப்பார். அதனால்தான் அவருடைய சிறந்த மூளை ஒருவாறு திரிந்தது. அவரைப் போல் நான் ஆசிரியரிடம் அடிவாங்கவில்லை. என் ஆசிரியர்கள் வாங்க வேண்டிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவலை இல்லாமல் இருந்தார்கள். அதனால் நான் பள்ளிக்கூடத்தில் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கல்வியைப் பெறாமல் நான் தப்பித்துக்கொண்டதால்