பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

25


ஜான்சனைப்போல், நான் மதுக்கடைகளில், இலக்கியம் கற்ற அறிவற்றவர்களோடு வெட்டிப் பேச்சுப் பேசி, காலத்தை வீணாக்காமல் வாழ்ந்தேன். அந்தக் கல்வியால்தான், தம் திறமையைக் காட்டி, இங்கிலாந்தை ஆட்டி வைத்திருக்க வேண்டிய ஜான்சன் தம் காலத்தை வீண்பேச்சில் கழித்தார்” என்று கூறினார் ஷா.


இன்னும் மறக்கவில்லை

ஷா ஒரு முறை கொழும்புக்கு போயிருந்தார். அங்கே அறிஞர் ஒருவர் ஆங்கில இலக்கியத்தைப் பற்றி ஷாவிடம் வானளாவப் புகழ்ந்து பேசினார்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த ஷா, “இருபது வயதில் நான் படித்து மறந்து போனதை, நீங்கள் இன்னும் மறக்கவில்லையே” என்றார்.


துணிவு ஏன் ஏற்படுகிறது?

இளமைப் பருவத்தில், தன் சகோதரிகள் இருவருடன் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாதா கோயிலுக்குப் போய் வந்தார் ஷா.

“இளமையும் சுறுசுறுப்பும் அடைய நாடி நரம்புகளையும் தசை நார்களையும் கொண்ட பிள்ளைகள் அழகான உடை