பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அணிந்துகொண்டு அசையாமலும், வாய் திறவாமலும், கோயில் கட்டடத்துக்குள் அமைதியாக அடைபட்டுக் கிடப்பது பெரிய கெடுதலாகும். அந்தக் கட்டடத்துக்கு வெளியே உலாவி, கை, கால்களுக்கு பயிற்சி தருவது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்போது, உள்ளே நீண்ட நேரம் அடங்கிக் கிடப்பது பொறுக்க முடியாததாகும். உணர்ச்சியுள்ள இளைஞர்கள் அதனால் தங்களுக்கு உரிமை உண்டாகி, வளர்ந்து பெரியவர்களான போது கோயிலுக்குப் போகாமல் நின்றுவிடத் துணிவு ஏற்பட்டுவிடுகிறது” என்று குறிப்பிடுகிறார் ஷா.


சொந்த நாட்டின் பாராட்டு

ஷா அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். ஆயினும் அந்த நாட்டு மக்கள் அவரை வெகுகாலம் வரை பாராட்டி மதிக்கவில்லை. காரணம் பொறாமையும், நெடுங்காலம் அடிமை வாழ்வில் உழன்ற உணர்ச்சியுமே ஆகும்.

ஷாவின் முதுமைக் காலத்தில், டப்ளின் நகராட்சிமன்றம் அவரைக் கெளரவித்துப் பாராட்ட முன்வந்தது.

“என் சொந்த நகரத்தின் பாராட்டுதலுக்கு நன்றி செலுத்துகிறேன். இதுவரை வெளிநாட்டாரின் பாராட்டுதல்கள் என்னை அணுகியபோதெல்லாம் நான் ஒளிந்து தப்பித்து வந்தேன். எப்பொழுதும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் டப்ளின் நகரத்தை நான்