பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

29


மதித்து வந்தேன் என்பதை அந்த நகரம்தான் கூற உரிமை உண்டு. நேரில் வந்து கெளரவத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் நான் இல்லை. என்னுடைய முதுமை அதற்கு இடம் தரவில்லை” என்று எழுதினார்.

அதன்பின், டப்ளின் நகராட்சிக் குழு ஒன்று லண்டனுக்கு வந்து ஷாவைப் பாராட்டி கெளரவத்தை அளித்தது.


தனித்து வாழ்வதா?

லண்டனில் உள்ள அயர்லாந்துக்காரர்கள், “ஐரிஷ் கிளப்” என ஒரு கழகத்தை நிறுவினார்கள். அதற்கு வாழ்த்துக் கூறுமாறு ஷாவுக்கு அழைப்பு அனுப்பினார்கள்.

“ஐரிஷ் கிளப்” என்ற அமைப்பு எனக்கு மிகவும் இழிவானதாகத் தோன்றுகிறது. இங்கிலாந்தில் உள்ள நீங்கள் ஆங்கிலேயர்களுடைய கழகங்களில் கலந்து கொள்ள வேண்டும். இங்கே வந்த பிறகும்கூட, நீங்கள் இப்படி தனிக் குழுவாக வாழ்வதனால், அயர்லாந்தைவிட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்திருக்கலாமே. ஆங்கிலேயருடைய கழகங்களில் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆங்கிலேயர் ஒருவேளை உங்களைக் காட்டிலும் முட்டாள்களாக இருக்கலாம். ஆனால், நீங்களும் அவர்களும் ஒருவருக்கு ஒருவர் அந்நியர் ஆகையால், கலந்து பழகிக் கற்றுக்கொள்ளக் கூடியவை ஏராளமாக உள்ளன என்று