பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


பதில் எழுதினார் ஷா. (இந்தியாவில் பல மாநிலத்தவர்கள், மாவட்டத்தினர் சங்கம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?-ஆசிரியன்).


உழைப்பில் வல்லவர்

“குடிப்பதில் என் தந்தை எவ்வளவு வல்லவரோ, அவ்வளவுக்கு உழைப்பதில் நான் வல்லவன்” என்று ஷா தம்மைப் பற்றிக் குறிப்பிடுவார்.


மாணவர்களின் வெறுப்பு

கல்வித் துறையினர் ஒரு சமயம், ஷாவின் ‘செயிண்ட் ஜோன்’ என்ற நூலின் ஒரு பகுதியை பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்வதற்கு ஷாவிடம் அனுமதி கேட்டனர்.”

“இப்பொழுதோ, இனிமேலோ பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் என் நூல்களை இணைக்கும் முயற்சியை நான் வெறுக்கிறேன். அப்படிச் செய்ய முயன்றதால், மாணவர்கள் ஷேக்ஸ்பியரை வெறுப்பதுபோல், என்னையும் வெறுப்புக்கு ஆளாக்காமல் இருப்பார்களாக” என்று கூறி அனுமதி தர மறுத்துவிட்டார் ஷா.