பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

31




எங்கேயும் போகவில்லை

ஷாவின் தாயும் தந்தையும் அக்கம்பக்கத்தாருடன் சுமுகமாகப் பழகமாட்டார்கள்; உறவினர் வீடுகளுக்குச் சென்று அளவளாவுவதும் இல்லை.

“என்னுடைய இளமைக் காலத்தில், என்னுடைய பெற்றோருடன் எந்த உறவினர் வீட்டுக்கும் போய் வந்ததாக எனக்கு நினைவே இல்லை” என்று குறிப்பிடுகிறார் ஷா.


அதுவே அவர்களை நடத்தியது

ஷாவின் தந்தை, தமக்குக் கிடைத்த ஓய்வு ஊதியத்தைக் கொண்டு, பெரிய வியாபாரமும் மாவுமில் ஒன்றும் ஒருவருடன் கூட்டாகச் செய்தார். பொறுப்போடு அவர் கவனிக்காமல் மற்றவர்களிடம் விட்டதால் தொழில் சிறப்படையவில்லை. அதைப்பற்றி, “அவர்கள் அந்தத் தொழிலை நடத்தவில்லை; அந்தத் தொழிலே அவர்களை நடத்தி வந்தது” என்று ஷா குறிப்பிடுகிறார்.


ஆத்திரத்தால் உண்டான நஷ்டம்

சர். எப். ஸி. கெளல்டு என்பவருக்கும், பெர்னார்ட்ஷாவுக்கும் பரோ கவுன்ஸில் தேர்தலின்போது கடிதப் போக்குவரத்து நடைபெற்றது.