பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அந்தச் சமயம் ஷா காரசாரமாகவும், நீளமாகவும் கெளல்டுக்கு கடிதங்கள் எழுதினார்.

ஒவ்வொரு கடிதமும் ஷாவின் புத்தக முன்னுரைகளைப் போல நீண்டிருக்கும்.

ஒரு கடிதத்தில், தாம் பேசும் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும்படி கௌல்டை வேண்டினார் ஷா.

கெளல்டு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் இருவருக்கும் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடந்து கடைசியில் கெளல்டு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டார்.

“தங்களுடைய அபிப்ராயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, என்னுடைய கூட்டத்தில் எப்படி பேசப்போகிறீர்கள்?” என்று ஷா குத்தலாக கௌல்டுக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதம் கெளல்டுக்கு மிகவும் ஆத்திரமூட்டியது. அதன் காரணமாக ஷாவின் கடிதங்கள் யாவும் கிழிக்கப்பட்டுக் குப்பைக் கூடையில் போய் விழுந்தன.

‘என் தந்தை மட்டும் அந்தக் கடிதங்களைக் கிழித்துப் போடாமல் இருந்திருந்தால், நான் வாடகை வீட்டில் இப்பொழுது குடியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது! அதன் பெயர் “ஸெயின்ட பெர்னார்ட்” என்று மாறியிருக்கக்கூடும் அல்லவா? என்று கௌல்ட் மகன் கூறுகிறார்.