பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


வைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் செயல்களில், அவர் எதற்கு அதிக மதிப்பெண் கொடுப்பார் என்று நினைக்கிறீர்கள்?”

“கடவுள் மாத்திரம் என் செயல்களுக்குத் தேர்வு மதிப்பெண் போட ஆரம்பித்தாரானால், அப்புறம் எனக்கும் அவருக்கும் பெரிய தகராறுதான் வந்துவிடும்” என்றார் ஷா,

(இங்கிலந்தில் ஒரு தம்பதியர் ஷாவிடம் உரையாடிய போது நிகழ்ந்தது)


ஏக்கமும் அவமானமும்

ஷாவுக்கு தம் பெற்றோரிடத்தில் கொஞ்சம்கூட பாசம் கிடையாது. அவர்களும் இவர்மீது அன்பு காட்டியதில்லை.

தம் தந்தை ஒரு குடிகாரர். போக்கிரி என்பதை அறிந்து ஷா மிகவும் அவமானம் அடைந்திருக்கிறார்.

அதைக் காட்டிலும், அவமானம், இளமையில் ஆரம்பப் படிப்புக்காக, ஒரு இலவச பள்ளிக்கூடத்தில் ஒன்பது மாதங்கள் படிக்க வேண்டியதாயிற்று என்று நினைத்து வெட்கம் அடைந்தாராம்.

இந்த விஷயத்தை மாத்திரம் தம் மனைவியிடம் கூடச் சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தாராம் ஷா.