பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

35


இந்த அவமான உணர்ச்சியானது வாழ்நாள் முழுவதும் அவரிடம் மறையாமல் இருந்து வந்ததாம்.

“என் தாய் என் அன்பைக் கவர ஒருபோதும் முயன்றது இல்லை. நானும் அவருடைய அன்பைப் பெற முயன்றவன் அல்லன். என்னை ஒரு உதவாக்கரையாகவும், பெரிய சுமையாகவும் என் தாய் நினைத்தார்.

நான் குழந்தையாக இருந்தபோது, அன்பு என்பது என்னவென்றே எனக்குத் தெரியாது.

நான் வீட்டை விட்டுப் போன பிறகு திரும்பி வராமலே இருந்திருந்தால், அவர்களில் யாருமே என்னை இழந்துவிட்ட உணர்ச்சியை அடைந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை” இவ்வாறு கூறுகிறார் ஷா.


சமையற்காரி தேவை

பெர்னார்ட்ஷாவிடம் முப்பது ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இரண்டு வேலையாட்கள் விலகி, ஒய்வு பெற விரும்பினார்கள். ஆனால் ஷாவுக்கு அவர்களை அனுப்ப மனம் இல்லை.

அடுத்த வீட்டுக்காரான ஸ்டீபன் வின்ஸ்டைன், அவர்களை அனுப்பிவிட்டு, வேறு ஒரு ஏற்பாட்டைச் செய்து கொள்ளக்கூடாதா?” என்று சொன்னார் ஷாவிடம்.