பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


”சைவ உணவு சமைக்கும் சமையற்காரி கிடைக்க மாட்டாளே!” என்றார் ஷா.

“உங்களுக்குச் சேவை செய்வதை ஆனந்தமாகக் கருதுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்” என்றார் ஸ்டீபன்.

“அப்படிப்பட்ட ஆட்களைத்தான் என் வீட்டுக்குள் வரவிடக்கூடாது என்றிருக்கிறேன். நான் விரும்பக் கூடிய ஆள் தன் தகுதியை நன்கு உணர்ந்தவளாக இருக்க வேண்டும் என்னுடைய கருத்துக்களில் அவளுக்கு எவ்வித அக்கறையும் இருக்கக்கூடாது; என் புத்தகங்களை வாசிக்கக்கூடாது; தியாக புத்தியோடு எனக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் எந்த சமையல்காரியும் வரக்கூடாது. என்னிடத்தில் வாங்கும் சம்பளத்துக்காக வேலை பார்ப்பவளைத்தான் நான் விரும்புகிறேன். எந்த வேலைக்காரியும் தன் சொந்த முதலாளிக்கு லட்சியப் பெண்ணாக இருக்க முடியாது” என்றார் ஷா.


அறிவும் அழகும்

ஷாவின் ரசிகையான ஒரு பெண்மணி, “உங்கள் சிறப்புமிக்க நூல்களைப் படித்து, என் மனத்தைப் பறிகொடுத்துவிட்டேன். நான் மிகவும் அழகானவள். உங்கள்