பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

37


அறிவோ மிகவும் சிறப்புமிக்கது. ஆகவே, நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் என்ன? உங்கள் அறிவோடும் என் அழகோடும் குழந்தைகள் நமக்குப் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று ஷாவுக்கு எழுதினாள்.

“மிகவும் மகிழ்ச்சி, ஆனால், என் அழகோடும் உங்கள் அறிவோடும் குழந்தைகள் பிறந்தால், உலகத்துக்கு எவ்வளவு பெரிய ஆபத்து சூழும், ஆகவே, உங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறேன்” என்று அந்தப் பெண்மணிக்கு ஷா பதில் எழுதினார்.


பெரிய ஆபத்து எது?

காந்தியடிகள் கொலை செய்யப்பட்டபோது ஷா எழுதியதை யாராலும் மறக்க இயலாது.

“ஏது, உலகில் மிக நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்து என்பதை இக்கொலை எடுத்துக்காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.


இருவர்தானா?

“உலகத்திலே விஞ்ஞான நுட்பத்தை அறிந்தவர்கள் இருவர்தான். நானும் ஐன்ஸ்டீனும்!” என்று குறிப்பிட்டார் ஷா.