பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்




நீங்கள் தயங்குவீர்களா?

ஷா நகைச்சுவையாகப் பேசுவதில் அளவுக்கு மீறிய பைத்திய கொண்டிருப்பதை ருஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய் கண்டித்திருந்தார்.

அதற்கு ஷா, “நகைச் சுவையையும், சிரிப்பையும் ஏன் தள்ளிவைக்க வேண்டும்? இந்த உலகம் கடவுளின் ஒரே நகைச்சுவையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உலகத்தை மோசமான நகைச்சுவையாக இல்லாமல், நல்ல நகைச்சுவையாக ஆக்குவதற்குப் பாடுபடத் தயங்குவீர்களோ?” என டால்ஸ்டாய்க்கு எழுதியிருந்தார்.


மேஜரும் மைனரும்

காந்தியடிகளை ‘மகாத்மா மேஜர்’ என்றும், தம்மை ‘மகாத்மா மைனர்’ என்றும் ஒருமுறை ஷா சொன்னார்.


அவர் ஏமாந்தார்

ஷாவின் கையொப்பத்துக்கு மதிப்பும், கிராக்கியும் உண்டு என்பதை பலரும் அறிவார்கள். ஷாவின் கையொப்பத்தைப் பெறுவதற்காக ஒருவர், ஏதோ, ஒரு பிரச்சினையைப் பற்றி கடிதம் எழுதினார்.