பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

41


ஷா அவருக்குப் பதில் எழுதி, இறுதியில் கையொப்பம் இடாமல் (SD) G. Bernard Shah என டைப் அடித்து அனுப்பிவிட்டாராம். ஷா அவருடைய நோக்கத்தைத் தெரிந்துகொண்டாரோ!


அவர்களுக்குத் தெரியும்

ஷாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் அடிக்கடி ஷாவின் மாளிகைக்கு வந்து, உரையாடுவது வழக்கம். உரையாடலில் கிண்டலும், கேலியும், நகைச்சுவையும் காணப்படும்.

ஷா மெலிந்து, மிக ஒல்லியாயிருப்பார்.

ஒரு சமயம் ஷாவைப் பார்த்து, “வெளிநாட்டிலிருந்து இங்கே வருபவர்கள், உங்களைப் பார்த்தால், இங்கே பெரிய பஞ்சம் உண்டாகி இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்” என்று கிண்டலாகச் சொன்னார் நண்பர்.

உடனே ஷா, “அதே சமயத்தில், அவர்கள் உங்களைப் பார்த்தவுடன் அந்தப் பஞ்சத்துக்கான காரணத்தையும் புரிந்துகொள்வார்கள்” என்றார் நண்பர் மிகவும் பருமனாக இருப்பார்!


அறிந்தவர் இருவர்

ஒரு கூட்டத்தில், “கம்யூனிசம் என்றால் என்ன? சோஷலிசம் என்றால் என்ன?” என்று விளக்கிப் பேசிக் கொண்டிருந்தார்.