பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அவர் பேச்சைக் கூட்டத்தினர் ரசித்ததாகத் தெரியவில்லை.

“இந்த விஷயம் மிகவும் எளிமையானதுதான். ஆனாலும், அரசியல் அறியாமையாலும், பொருளாதாரக் கோட்பாடு புரியாமையாலும் என்னுடைய இந்தப் பேச்சு எவருக்கும் விளங்குவதில்லை. உலகத்திலே, “கம்யூனிசம்”, “சோஷலிசம்” என்பதை அறிந்தவர் இருவர்தான். ஒருவர் ஸ்டாலின், மற்றொருவர் நான்” என்றார் ஷா,


மிருகத்தன்மையா?

ஷா புலால் உணவு கொள்வதில்லை. மரக்கறி உணவையே பெரிதும் விரும்பி உண்பார். அதைப் பற்றிப் பிரசாரமும் செய்வார்.

“மரக்கறி உணவு எவ்வாறு சிறந்தது” என்று ஒருவர் ஷாவிடம் கேட்டார்.

“அறிஞர்களுக்கும் தத்துவ மேதைகளுக்கும் சைவ உணவே சிறந்தது. சைவ உணவை உண்பவர்களே சோர்வில்லாமல், அதிகமாக உழைக்கக் கூடியவர்கள். மிருகங்களைச் சார்ந்து, அவற்றை நம்பி வாழும் வாழ்க்கை மக்களுக்கு இருக்கக் கூடாது. மிருக உணவை உண்டு, பழகப்பழக அந்தத்தன்மையே மக்களுக்கு அமைந்துவிடும்” என்றார் ஷா.