பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

43




அவர் சின்னக் குழந்தை

காந்தி அடிகளின் புதல்வர் தேவதாஸ் காந்தி, ஐரோப்பா சுற்றுப் பயணத்தின்போது, பெர்னார்ட் ஷாவைச் சந்தித்து உரையாடினார்.

அப்பொழுது, தேவதாஸ் காந்தியிடம், “காந்தியடிகளின் வயது என்ன?” என்று கேட்டார் ஷா.

தேவதாஸ் காந்தி, “காந்தியடிகளுக்கு வயது எழுபத்து ஆறு” என்று கூறினார்.

“அது ஒன்றும் அதிகம் இல்லை. அவர் இன்னும் சின்னக் குழந்தைதான்!” என்றார் ஷா.

ஷாவுக்கு அப்பொழுது காந்தியடிகளைவிட வயது அதிகம்!


இருவரும் கோமாளிகளே

சர்க்கஸ் காட்சி ஒன்றுக்கு பெர்னார்ட்ஷா வருகை புரிந்தார்.

அந்தக் காட்சியில் கோமாளியாக நடித்தவரை, ஷாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சர்க்கஸ் நிர்வாகி.

“பழைய கோமாளி ஒருவனோடு நீர் கைகுலுக்குவதற்கு, உங்களுடைய பெருந்தன்மை காரணம்” என்றார் சர்க்கஸ் கோமாளி.