பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


அதைக் கண்ட நண்பர் ஒருவர் ஷாவிடம், “இந்தச் செல்வந்தர்களுக்கு இவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்? அதை எப்படி அனுபவிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லையே?” என்றார்.

“பணத்தை எப்படி அனுபவிப்பது என்று நமக்குத் தெரிந்திருந்தும் என்ன பயன்? நம்மிடம்தான் பணம் இல்லையே! அவர்களைக்காட்டிலும் நாம் எந்தவிதத்தில் சிறந்தவர்கள்?” என்று பதில் அளித்தார் ஷா.


என்னால் இயலவில்லை

“என்னைக் காட்டிலும் அறிவாற்றல் குறைந்தவர்கள் பல மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். என்னால் முடியவில்லையே, பாடுபட்டும்கூட இயலவில்லை” என்று கூறுகிறார் ஷா.


யாருக்கு வெற்றி?

சந்தர்ப்பம் வாய்க்கும்பொழுது எல்லாம் ஷேக்ஸ்பியரைப் பற்றி கேலியாகப் பேசுவதும் கிண்டலாக எழுதுவதும் ஷாவுக்கு வழக்கமாகிவிட்டது.

லண்டனில், ஷேக்ஸ்பியரின் வாசகர்கள் சிலர், ஷாவை மட்டந்தட்ட திட்டமிட்டார்கள்.