பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

47


ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அதில் கலந்து கொண்டு பேசுமாறு ஷாவை அழைத்திருந்தார்கள் ஷேக்ஸ்பியர் வாசகர்கள்.

கூட்டத்தில் ஷா வழக்கம்போல் நகைச்சுவையாகப் பேசினார். என்றாலும், முன்பே திட்டமிட்டிருந்தபடியால் கூட்டத்தினர் ஷாவின் பேச்சை ரசித்துக் கைதட்டவில்லை.

மேலும், தலைமை வகித்தவரும் ஷாவைப்பற்றி ஏதோ கிண்டலாகக் கூறினார்.

அதற்கு மட்டும் கைதட்டி சிரித்தனர், ரசித்தனர் ஷேக்ஸ்பியர் வாசகர்கள். ஷாவை மட்டம் தட்டியதாக கருதினர்.

ஷா எழுந்து மறுபடியும் பேசத் தொடங்கினார்:

“ஷேக்ஸ்பியர் அபிமானிகளே! இப்பொழுது நான் கூறிய நகைச்சுவைச் சொற்பொழிவு ரசிக்கத் தக்கதாக இல்லை என்று குறை கூறப்படுகிறது.

“இப்பொழுது நான் கூறியவை அனைத்தும் என் சொந்த நகைச்சுவை அல்ல! ஷேக்ஸ்பியர் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிய ஷேக்ஸ்பியரின் சொந்த நகைச்சுவையே அது உங்களால் அதை ரசிக்க இயலவில்லையானால், அதற்கு நான் பொறுப்பு அல்ல!” என்று கூறி முடித்தார் ஷா.