பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


ஷேக்ஸ்பியரின் வாசகர்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமே!


என்னுடைய தனிப்பண்பு

பெர்னார்ட்ஷா தம்மைப்பற்றியே பதினாறு கட்டுரைகள் எழுதி ஒரு சமயம் வெளியிட்டிருந்தார். அவை அனைத்தும் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றியவையே.

குழந்தைப் பருவத்தில் தொடங்கி, இப்பொழுது வரை தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை, தமக்கே உரிய தனிப்பாணியில் எழுதி இருக்கிறார்.

இக்கட்டுரைகள், “தொணதொணவென்று பேசும் தொண்டு கிழவனின் பிதற்றல்கள்தானா என்று தெரியவில்லை” என அவரே கூறுகிறார்.

“நான் மகிழ்ச்சியாய் இல்லை. மகிழ்ச்சியாய் இருக்க விரும்பவும் இல்லை. அதற்கு எனக்கு அவகாசமோ, ஆசையோ கிடையாது. யதார்த்த மனப்பான்மையுடன் விஷயங்களைக் கவனிப்பதுதான் என்னுடைய தனிப் பண்பு” என்று எழுதுகிறார். அதற்கு அவர் உதாரணம் காட்டுகிறார்.