பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

49


“இந்திய ராஜா ஒருவர் தமது ஆசை மனைவியுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது ராணியின் உடையில் திடீரென்று நெருப்புப் பற்றிக் கொண்டது. அவள் எரிந்து சாம்பலானாள். பரிவாரங்கள் எல்லாம் அழுது புலம்பினார்கள். உடனே அந்த ராஜா என்ன செய்தார் தெரியுமா? ராணியின் சாம்பலை பெருக்கித் தள்ளிவிட்டு, வான்கோழிக் கறியை எனக்குக் கொண்டு வாருங்கள் என்று அவர் உத்தரவிட்டார். அந்த ராஜாவை கிழக்கத்திய பெர்னார்ட்ஷா என்று சொல்லலாம்!”


பின்வாங்கிச் செல்லுதல்

1876-ல் அயர்லாந்தைவிட்டு, லண்டனுக்குச் சென்ற ஷா 1905-ல் அதாவது 29 ஆண்டுகளுக்குப் பிறகு, டப்ளினுக்குச் சென்றார். அதுவும் தம் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிப் போக இசைந்தாராம்.

அப்போது நேராக டப்ளினுக்குச் செல்லாமல், அயர்லாந்தின் தென் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து டப்ளின் நகருக்குச் சென்றார். லண்டனிலிருந்து நேராகவே சென்றிருக்கலாம். ஆனால், அதுதான் வந்த வழி என்றும், வந்த வழியாகத் திரும்பிப் போகக்கூடாது என்றும், எப்பொழுதும் பின்வாங்கிச் செல்லக்கூடாது என்பதே தம் கொள்கை” என்றும் கூறினார்.