பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்




பள்ளிப் படிப்பினால் பயன் என்ன?

பள்ளிக்கூடம் என் உள்ளத்தைக் கவரவில்லை ஆகவே, அங்கே கற்றுக் கொண்டது ஒன்றும் இல்லை. அதைக் குறித்து இப்பொழுது நினைத்து மகிழ்கின்றேன். ஏனென்றால், செயற்கையான உடல் உழைப்பு உடலைக் கெடுப்பது போல், செயற்கையான மூளை உழைப்பும் தீமையே செய்யும் என்று நான் உணர்கிறேன். ஆகவே, விருப்பம் இல்லாதவைகளைத் திணித்துப் புகட்டும் கல்வி முறையானது மரத்துளை வற்புறுத்தி உண்ணும்படி செய்வது போலத்தான். குழந்தையின் கையையும், காலையும் இரும்பால் பிணைத்து பெற்றோர் விரும்பும்போது, விரும்பியபடி ஆட்டி அசைத்துப் பழக்கினால், அந்தக் குழந்தை நடை முதலியவற்றை கற்றுக்கொள்ள இயலுமா? டப்ளின் நகரிலிருந்த டிரினிட்டி கல்லூரியில் படித்தவர்கள், பயனற்றவர்களாக இருந்ததை நான் இளமையிலேயே கண்டு அதையும் வெறுத்துவிட்டேன்” என்று குறிப்பிடுகிறார் ஷா.


கிராமத்து மக்கள்

ஷா சிறுவயதில் சித்தியின் வீட்டில் இருக்கும்போது குதிரைமீது ஏற்றி வைத்து சவாரி செய்யும்படி வற்புறுத்தினார். அவருடைய சித்தி, ஷா பயந்து குதிரை மீது இருந்தபடியே நடு நடுங்கி, என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தாராம்.