பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

51


அதைப்பற்றி ஷா.

“கிராமத்து மக்கள், இப்படி சிறுவர்கள் உடலில் முரட்டுத் தன்மையை வளர்க்கத் தயங்குவதே இல்லை. ஆனால், உள்ளத்தைக் கோழையாக்கி வருகிறார்கள். துணிகரமான செயல்களைப் பற்றிய பேச்சுக்களை அவர்களிடம் எப்பொழுதும் கேட்கலாம். ஆனால், பயமற்ற எண்ணங்களைப் பற்றி அறியவே முடியாது. உடலால் முரடராகவும், உள்ளத்தால் மெல்லியராகவும் வளர்க்கவே அவர்களால் முடியும்” என்று கூறுகிறார்.


உண்மையை உணர முடிந்தது

இளமையில் ஷா பைபிளைப் படிக்காததோடு அதைப் பழித்திருக்கிறார். அதைக் கண்ட தந்தை, அவரைக் கண்டித்து, அதன் பெருமைகளையும், படித்து உணர வேண்டிய கடமையையும் எடுத்துக் கூறினார். ஆயினும், ஷாவின் மனம் மாறவில்லை. தாயோ மக்களுக்குச் சமயத்துறையில் ஒன்றும் வழிகாட்டவில்லை. இதைப்பற்றி ஷா.

“என் தாய், இப்படி கவலை இல்லாமல் வளர்த்த முறையால், என் சகோதரிகள் இருவருக்கும் பெரிய தீமையே விளைந்தது. ஆனால், என்னைப் பொறுத்த வரையில் என் அறிவில் சமயத்துறை அழியவில்லை. உண்மையான