பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


நம்பிக்கைகள் குடிபுகுவதற்கு வழிவகுத்தாற்போல் இருந்தது. அறிவுக்குச் சார்ந்த உண்மைகளை உணரமுடிந்தது” என்று குறிப்பிடுகிறார்.


சங்கத்துக்கு வெற்றி

பேபியன் சங்கத்தின் மீது ஒருமுறை எச்.ஜி வெல்ஸ், வெறுப்படைந்து பல குற்றச்சாட்டுகளைக் கூறினார். அவருடைய தாக்குதலைச் சமாளித்து, வெற்றிபெறக் கூடியவர் ஷா ஒருவரே என்று கருதினார்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், ஷாவிடம் சென்று விவரத்தைக் கூறினார்கள். ஷாவும் அதற்கு இசைந்து, கூட்டத்துக்கு வந்தார். குற்றச்சாட்டுகளுக்கு தகுந்தபடி காரணம் சொல்லிக் கொண்டு வந்தார். இறுதியில், வெல்ஸின் அறிக்கைக்கு சங்கத்தினர் பதில் அனுப்பாமல் காலம் தாழ்த்தியதற்கு காரணம் கூறத் தொடங்கினார்.

“உண்மைதான், கால தாமதத்தைப்பற்றி வெல்ஸ் அறிய வேண்டியது. பொருத்தம்தான். ஆனால், எவ்வளவு காலம் யாரால் கழிந்தது என்பதைக் கூறுகிறேன். வெல்ஸால் ஏற்பட்ட கால தாமதம் பத்து மாதங்கள். சங்கத்தின் பழைய பெருச்சாளிகளால் ஆறு வாரங்கள், அதற்கு உரிய குழு நடவடிக்கை மேற்கொண்டபோது வெல்ஸ் அமெரிக்காவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால், அவருடைய அறிக்கைக்கு நான் விடை எழுதிக்