பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

53


கொண்டிருந்த காலத்தில், ஒரு நாடகம் எழுதி முடித்தேன்” என்று கூறி, தொடர்ந்து பேசாமல் நின்றார். எதையோ எண்ணுவதுபோல் மறந்ததுமாதிரி அவருடைய பார்வைமேல் நோக்கித் திரும்பியது. கூட்டத்தினர் அமைதி இழந்தனர். சிறிது நேரத்தில் ஷா பேச்சைத் தொடர்ந்தார். “பெருமக்களே சிறிது நேரம் என் பேச்சை நிறுத்திப் பார்த்தேன். வெல்ஸ் என் நாடகத்தையாவது பாராட்டி, ‘அதுவும் ஒரு நல்ல நாடகமாகவே எழுதினார்’ என்று சொல்வார் என்று எதிர்பார்த்து ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தேன்” என்று கூறிமுடித்தார்.

கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஷா உட்கார்ந்தார் பேபியன் சங்கத்துக்கு வெற்றித் தேடித் தந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு, வெல்ஸ் இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தச் சங்கத்திலிருந்து விலகிவிட்டார்.


தனிச்சிறப்புடையவர்

“நான் ஒரு தனிச் சிறப்புடைய மனிதன் என்று என்னைக் கூறலாம். நாடகங்களும் நூல்களும் எழுதுவதைப் பொறுத்த வரையில் அது உண்மையே! ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மற்றவர்கள் செய்ய முடியாததைச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். ஆகையால், இதில் ஒன்றும் உயர்வு இல்லை.