பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


”வறுமை, செல்வம், அடிமைத்தனம், ஆளும் வகை ஆகியவற்றில் எல்லாம் எனக்கு இருந்த அனுபவத்தைக் கருதினால், நான் தனிப்போக்கு உடையவன் என்று கருதலாம். அல்லது - மிகச் சுவையானது என்று சொல்லி என்னை ஏமாற்றி ஏதோ உபயோகமற்ற மருந்தை சிறுவயதில் என் வாயில் ஊற்றினர்களே அந்தக் காரணத்தாலோ எந்தக் காரணத்தாலோ பிறரால் சலித்தும், நொந்தும், மெலிந்தும், வருந்தியும், களைத்தும், துன்புற்றபோதெல்லாம் மிக நன்றாக இன்புறுவதாக எண்ணிக்கொண்டு உறுதியாக வாழ்ந்து வந்திருக்கிறேன். இந்த வகையிலுந்தான் தனிப்போக்கு உடையவன் என்று கருதலாம். இவற்றைத் தவிர வேறு தனிச்சிறப்பு எனக்கு இல்லை.” இவ்வாறு அவர் எழுதியதைக் காணும்போது இந்த ஷா வேறு ஒருவரோ என்று தோன்றலாம்.


எனக்காக நண்பர் விட்டுக்கொடுத்தார்

ஷாவின் பாதத்தில் கட்டி எழும்பி அறுவை சிகிச்சை செய்துகொண்டார், அப்பொழுது, அவரைக் காதலித்த டவுன் ஷெண்ட் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகப் பதிவு நிலையத்திற்குச் சென்றார். எப்படிச் சென்றார்? கந்தலான பழைய சட்டையுடன் இரண்டு ஊன்று கோலுடன், நொண்டியபடியே ஷா காட்சியளித்தார்.