பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

55


அவருடைய இரண்டு நண்பர்கள் சிறந்த உடை அணிந்துகொண்டு சாட்சிக்காக வந்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஷா கூறுகிறார்:

“அவர்களில் ஒருவர் மணமகனாக இருக்கவேண்டும் என்று பதிவாளர் எண்ணிவிட்டார். திருமணக் கூட்டத்தில் தவறாமல் வந்து காட்சி அளிக்கும் பிச்சைக்காரர்களில் ஒருவராக என்னை நினைத்துவிட்டார். சாட்சிக்காக வந்திருந்த நண்பர் வாலஸ்க்குத் திருமணம் செய்து முடிக்க அவர் முற்பட்டார். நல்ல காலமாக, வாலஸ், சான்று மொழிகள் என்று எண்ணிப் பதிவாளர், சொன்னதைத் திரும்பிச் சொல்லி வந்து, கடைசியில் நீண்ட வாசகங்களாக இருப்பதை உணர்ந்து தயங்கிப் பின்வாங்கினார். இவ்வாறு, எனக்காக என் மனைவியை விட்டுக்கொடுத்தார்” என்று வேடிக்கையாக எழுதியுள்ளார்.


நான் ஒரு ஷேக்ஸ்பியர்

தமக்குக் கிரேக்க மொழியிலும் லத்தின் மொழியிலும் எவ்வளவு அறிவு உண்டு என்பதைப்பற்றி ஷா எழுதும்போது, “அந்த வகையில் நான் ஒரு ஷேக்ஸ்பியர்” என்று குறிப்பிட்டார்.

ஷேக்ஸ்பியருக்கும் அந்த இரண்டு மொழிகளும் தெரியாது.