பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


உயிர் இனங்களின் பாராட்டு

ஒரு சமயம் கணுக்கால் முறிந்து ஷா துன்புற்ற போது மருத்துவர்கள் அவர் உண்ணும் மரக்கறி உணவை குறை கூறிக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஷா,

“மிருகங்களைத் தின்று வாழ்வதைவிடச் சாவதே நல்லது. என் சாவுக்கு கோச்சு வண்டிகள் என்னைத் தொடர்ந்து வரவேண்டாம். ஆடு, மாடு, பன்றி, கோழி ஆகியவை மந்தை மந்தையாக வரட்டும். உயிருடன் மீன் காட்சிசாலை ஒன்று தொடர்ந்து வரட்டும். இந்த உயிரினங்கள் எல்லாம் கருப்பு உடை அணியாமல், வெள்ளை உடை அணிந்து தங்களைத் தின்று, உயிர் வாழ்வதை வெறுத்துச் சாகத்துணிந்த மனிதன் இவன் என்று என்னைப் பாராட்டிக்கொண்டு வரட்டும்” என்று பதில் அளித்தார்.


அது அவர் குற்றமல்ல

“என்னுடைய கலையில் அழகு உணர்ச்சி இல்லாமல், என் ஒழுக்க உணர்ச்சியின் கோணலும், அறிவின் மாறுபாடும் காணப்பட்டால், அது என் குற்றம் அல்ல. என் வாழ்க்கை பெரும்பாலும் பெரிய நகரங்களிலேயே கழிந்தது. அங்கே அழகு உணர்ச்சிக்கு இடம் இல்லை. ஆனால், அறிவுக்கோ கொழுத்த உணவு கிடைத்தது. ஏழைகள் வாழும் குப்பங்களைப் பற்றி எண்ணி எண்ணியே அறிவும்