பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

57


அலுத்துவிட்டது. இறுதியில் கலைஞன் என்னும் முறையில் அவற்றைப் பற்றியே சுவைபட எழுதும் கொடிய பழக்கமும் வந்து சேர்ந்தது. இதற்கு நான் என்ன செய்வேன்?” என்று அவரைப்பற்றி குறை கூறியவர்களுக்குப் பதில் கூறுவதுபோல் குறிப்பிடுகிறார் ஷா.


ஒருவருக்கு மூன்று இடங்கள்

தம்முடைய நாடகம் ஒன்றுக்கு ஒருமுறை ஷா போயிருந்தார். அரங்கு நிறைந்திருப்பதைக் கண்டார். ஆனால், கணக்கைப் பார்த்த போது, மூன்றில் ஒரு பங்குக்கே வருமானம் வந்ததை அறிந்தார். உடனே பொறுப்பாளருக்கு கடிதம் எழுதினார்.

“முழுக் கட்டணமும் செலுத்திய பிறகே, என் நாடகத்தைப் பார்க்க ஒருவர் உள்ளே வர வேண்டும். இது தெளிவாக விளக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மூன்றில் ஒரு பகுதி மக்களே நாடக அரங்கத்தில் இருந்தும் நாடகம் நடைபெற்றாலும் கவலை இல்லை. பணம் கொடுத்து நாடகம் காண வரும் பெருமக்கள் ஒவ்வொருவரும் மூன்று இடங்களைப் பயன்படுத்தலாம் என்றும், அவற்றில் தங்கள் குடை, கோட், தடி, கால் முதலியவற்றை வைத்துக் கொள்ளலாமென்றும் விளம்பரப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டார்.