பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்




உணர்த்துவது எப்படி?

இசை, இலக்கியம், ஓவியம், நாடகம் எதைப்பற்றி ஷா மதிப்புரை எழுதினாலும் பிறருடைய மனத்தைத் தாக்குவதாகவே இருந்தது.

“தங்களுக்குத் தொல்லை தராத எதைப்பற்றியும் மக்கள் கவலைப்படமாட்டார்கள். ஆகவே, ஏதாவது ஒன்றை உணர்த்த வேண்டுமானால், அவர்களின் மனத்தை தாக்கும் வகையில் உணர்த்த வேண்டும். இல்லையானால், உணர்த்தாமல் இருந்துவிடுவதே நல்லது” என்பது ஷாவின் கொள்கை.


நான் எப்பேர்பட்டவன்

ஒரு நாடகம் எழுதி முடித்த பிறகு, அதில் கை வைத்துத் திருத்துவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ யாருக்குமே ஷா இடம் கொடுக்கமாட்டார். ஆஸ்திரியாவிலுள்ள மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்,

“என் நாடகங்களில் ஒரு வரியை விட்டுவிடவோ ஒரு காற்புள்ளியை மாற்றவோ கூடாது. எனக்குத் தெரியும், நாடக உலகில் இருக்கின்ற வேலையாள் முதல் பொறுப்பாளர் வரையில் ஒவ்வொருவரும், நாடகத்தை எழுதிய ஆசிரியரைவிட தங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி மாற்றினால், பலர்