பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

59


விரும்புவர்கள் என்றும், வெற்றி அளிக்கும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களிடம் சொல்லுங்கள், நான் தலைகனத்தவன், ஆணவம் உடையவன், பிடிவாதக்காரன், அறிவாற்றலில் மேம்பட்டவன், காரணங்களுக்குச் செவிசாய்க்காதவன், என் நூல்களைப் பொறுத்தமட்டில் என் வழியில் செல்லத் துணிவு கொண்டவன் என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிவியுங்கள்” என்று குறிப்பிட்டார்.


கைம்மாறு என்ன?

“மாதக்கணக்காக எவ்வளவோ அரும்பாடுபட்டு எழுதி முடித்த நாடகத்துக்குக் கைம்மாறாக நான் மக்களிடமிருந்து பெறுவது என்ன? அவர்கள் மூன்று மணி நேரம் என் நாடகத்தைக் கண்டுகளித்து சிரித்து நாடக அரங்கை விட்டு வெளியே சென்றதும், இது ஒரு நாடகமா? என்று ஒதுக்கிப் பேசிச் செல்வதே ஆகும்” என்று குறிப்பிடுகிறார் ஷா,


சிக்கல்கள் எப்பொழுது?

ஷா தம்முடைய 93வது வயதில், அடுத்த வீட்டுக்காரரான ஸ்டீபன் வின்ஸ்டன் என்பவரிடம் பேசிக் கொண்டிருக்கையில், “தமக்கு 40வது வயது, 60 வது வயது, 80-வது வயது இவையே தம்முடைய வாழ்க்கையில் சிக்கல் நிறைந்த வயதுகள்” என்று கூறினார்.