பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

61


நோயணுகாமல் பார்த்துக்கொண்டால், 80 வது வயது வரையும் உயிரோடு இருக்கமுடியும், பிறகு உண்மையிலேயே வாழ்க்கையை சுகமாக அனுபவிக்க முடியும்” என்று ஷா கூறுகிறார்.


மீண்டும் அன்பளிப்பு

நூலாசிரியர் தாம் எழுதி, பிரசுரமான நூலை தமக்கு நெருங்கிய நண்பர்களுக்கு இன்னாருக்கு அன்பளிப்பு என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுப்பது வழக்கம்.

ஒரு சமயம் ஷா, பழைய புத்தகக் கடைக்குப் போயிருந்தார். அங்கே தம்முடைய கையொப்பத்துடன் கூடிய நூல் ஒன்று காணப்பட்டது. அதைப் பார்த்தார்.

நண்பர் ஒருவருக்கு தாம் அன்பளிப்பாகக் கொடுத்தது என்பது தெரியவந்தது. உடனே அதை விலை கொடுத்து வாங்கி, மீண்டும் அந்த நண்பருக்கே அனுப்பி வைத்துவிட்டார் ஷா.


ஒருவரே புத்திசாலி

அயர்லாந்து நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த டிவேலராவிடம் ஷாவுக்கு அளவற்ற அன்பும், மதிப்பும் உண்டு.