பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


முன்பு ஒரு சமயம், “உலக அரசியல் நிபுணர்களிலே டிவேலராதான் புத்திசாலி” என்று குறிப்பிட்டார் ஷா. (அப்போது உலகப் போர் நிகழ்ந்தது. அயர்லாந்து மட்டுமே நடுநிலைமை வகித்தது).


பளபளப்புக்குக் காரணம்

பத்திரிகை நிருபர் ஒருவர், ஷாவைப் பார்த்து “வயதான, காலத்திலும் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கிறதே அதற்கு என்ன காரணம்?” என்று கேட்டாராம்.

“சோப், ஸ்நோ, பவுடர் எதையுமே நான் உபயோகிப்பதில்லை” என்று பதில் அளித்தார் ஷா.

அந்த ஆண்டில் அத்தகையப்பொருள்களின் விற்பனை பெரும் அளவு மந்தமாகிவிட்டதாம்!


ஷா இல்லம்

ஹென்றி ஸால்ட் என்பவர் பெர்னார்ட்ஷாவுக்கு மிகவும் பிரியமான நண்பர். அவருக்கு ஷா பல கடிதங்கள் எழுதியுள்ளார். ஸால்ட் ஒரு குடிசையில் வாழ்வதாகக் கேள்வியுற்ற ஷா, “தங்களிடம் இருக்கும் என்னுடைய கடிதங்களை