பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

63


யாருக்காவது விற்று, அதன் மூலம் ஒரு வீடு வாங்கி வாழலாமே” என்று எழுதியிருந்தார்.

“தங்களுடைய கடிதங்களை விற்றுப் பணமாக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதற்கு தாங்களே தன்னிச்சையாக அனுமதி கொடுத்துவிட்டதால் அப்படியே செய்கிறேன். இது விஷயமாக, தங்களுடைய் யோசனையை ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று ஸால்ட் ஷாவுக்குப் பதில் எழுதினார்.

“அமெரிக்காவிலிருந்து என்னுடைய அசல் கைப்பிரதிகளை வாங்குவதற்காக ஒருவர் வந்து லண்டனில் தங்கி இருக்கிறார். அவரோடு எனக்குத் தொடர்பு இருக்கிறது, அவர் தங்களிடம் வரக்கூடும்” என்று ஷா ஸால்ட்டுக்குப் பதில் எழுதியிருந்தார்.

அமெரிக்கப் பிரதிநிதி மறுநாள். ஸால்ட்டிடம் வந்தார். பேச்சு வார்த்தை பேரம் நடந்து நிறைவேறி ஸால்ட்டிடம் இருந்த ஷாவின் கடிதங்கள் 36-ம் அமெரிக்கப் பிரதிநிதியிடம் சேர்ந்தன.

தாம் எதிர்பார்த்த தொகைக்கு மேலாகவே, தனக்குக் கிடைத்திருப்பதைக் கண்டு, ஸால்ட் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

மறுநாள் எச்.ஜி. வெல்ஸிடமிருந்து, “அமெரிக்கப் பிரதிநிதியை தாம் கிளப்பில் சந்தித்ததாகவும்,