பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


தங்களிடமிருந்து ஷாவின் கடிதங்களைப் பெற்ற விஷயத்தைப் பெருமையாய் எடுத்துச் சொன்னார் எனவும் ஸால்ட்டுக்குக் கடிதம் வந்தது.

ஷாவின் கடிதங்களை விற்றுவந்த பணத்தைக் கொண்டு ஒரு வீடு வாங்கி, அதற்கு “ஷா இல்லம்” என பெயர் சூட்டி அதில் வசித்து வருகிறார் ஸால்ட்.

மேலும் மேற்படி கடிதங்கள் விற்பனை தொடர்பாய் அதற்கு ராயல்டி தொகை வேறு ஸால்ட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.

(இந்தியாவில் இப்படி யாரும் செய்வார்களா? - ஆசிரியன்)


உன் தந்தையைப் போல்...

லண்டனில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், தம்முடைய வாழ்நாளில் யார் யாருடைய நூல்களை விரும்பிப் படித்தாரோ, அவர்களுக்கு நூறு பவுன் வீதம் தம் சொத்திலிருந்து கொடுக்க வேண்டும் என உயில் எழுதி வைத்தார். செல்வந்தர் காலமான பிறகு, அவருடைய மகன், தந்தை எழுதி வைத்திருந்த உயிலின்படி, குறிப்பிட்ட ஆசிரியர்களிடம் சென்று பவுனைக் கொடுத்து வரும்போது, பெர்னார்ட் ஷாவிடமும் போய் விவரத்தைக் கூறி நூறு பவுனைக் கொடுத்தார்.