பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

65


அதைப் பெற்றுக்கொண்ட ஷா , “உன் தந்தை செய்ததுபோல், மற்றவர்களும் செய்திருந்தால், மிக நன்றாக இருக்கும்” என்றார்.


கலைக்குச் சவுக்கடி

ஷா எழுதிய மதிப்புரைகள் காரசாரமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தன. அவற்றில் சில:

“இந்த வாரத்தில் கலை நல்ல சவுக்கடிபட்டு வருந்தியது. இன்ன இடத்தில் நடைபெற்ற விழாவின் பொருட்காட்சியே அதற்குக் காரணம்.”


வெறுப்பு வேண்டாம்

“இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு வெறுப்பின்றி திரும்ப வேண்டுமானால், நாடகம் தொடங்கி நீண்ட நேரம் கழித்துச் செல்ல வேண்டும்; அது முடிவதற்கு முன்னரே திரும்பிவந்துவிட வேண்டும்.


வற்புறுத்தக்கூடாது

“சில தியாகங்களைக் கட்டாயம் செய்யவேண்டும் என்று மக்களை வற்புறுத்தக்கூடாது. அவற்றுள் ஒன்று, இன்னாருடைய இசை அரங்குக்குச் சென்று கேட்க வேண்டும் என்பது” என்று ஒரு இசை அரங்கைத் தாக்கி எழுதினார்.