பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


முக்கிய நிகழ்ச்சி

சிலசமயங்களில் தம்மைப்பற்றி எழுதியும் நகைச்சுவை ஊட்டுவார்.

“அண்மையில் இசை உலகத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சி எது என்றால், இன்புளுயன்லா காய்ச்சல் என்னைத் தாக்கியது; அல்லது நான் அந்தக் காய்ச்சலைப் பற்றிக் கொண்டதாகும்”.


குற்றம் எது?

“நடு நிலைமை, நாகரிகம், நீதி என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு, உணர்ந்ததற்கு மாறாக எழுதுவது கலைக்குச் செய்யும் குற்றமாகும்.”


நாடக அரங்கத்தோடு போர்

“இங்கிலாந்தில் உள்ள நாடக அரங்குகள், எதை எதைப்பற்றியோ விளக்கும் நாடகங்களுக்கு இடம் அளிக்கின்றன. ஆனால், மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய பொது அறிவு, சமயம், விஞ்ஞானம், அரசியல், ஒழுக்க உணர்ச்சி ஆகியவற்றுக்கு இடம் தருவதில்லை. அதனால்தான் நாடக அரங்குகளோடு நான் போர் தொடுக்கிறேன். அறிக்கைகளும், அறிவுரைகளும், கட்டுரைகளும் எழுதி அவற்றோடு போர் புரியவில்லை. நாடகங்கள் எழுதியே அந்தப் போரை நடத்துகிறேன்.