பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

67


இதனால் லண்டன் நகர மக்கள் நாடகம் பார்க்கச் செல்லும்போது மனசாட்சியையும், மூளையையும் உடன் கொண்டு செல்லுமாறு செய்ய முடியும் என்று நம்புகிறேன். இப்போது அவர்கள் பைபிள் புத்தகத்தோடு மனசாட்சியையும் வீட்டில் வைத்துவிட்டே நாடகம் பார்க்கச் செல்லும்போக்கை ஒழிக்கவே, இந்த முயற்சியில் நான் ஈடுபட்டிருக்கிறேன்” என்று ஒரு முகவுரையில் ஷா கூறுகிறார்.


கற்பனை உலக வாழ்க்கை

“வீட்டின் உள்ளேயே அடங்கி, உலகம் அறியாத பூச்சிகளுக்கு உண்மையான வாழ்வு இல்லாவிட்டாலும், கற்பனை உலகிலாவது, அவர்கள் அந்த வாழ்க்கையை உணரட்டும் என்றே நாடகங்களை நடிக்கச் செய்ததோடு நிற்காமல், புத்தகமாகவும் வெளியிடுகிறேன்” என்கிறார் ஷா.

“விலங்குகளைச் சார்ந்து, அவற்றை நம்பி வாழும் வாழ்க்கை, மக்களுக்கு இருக்கக்கூடாது. விலங்குகளோடு பழகப் பழக அவற்றின் தன்மையும் மக்களுக்கு அமைந்துவிடும். விலங்குகளை மேய்த்து வளர்க்கும் ஆட்சிகளுக்கு அவற்றின் முகத்தோற்றமும் வந்து சேர்கிறது.”


நானே அறிவாளி

பிரசித்தி பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரைக் குறைகூறிக் கொண்டிருப்பது பெர்னார்ட்ஷாவின் வழக்கம்.