பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்


“பிரசித்திபெற்ற ஷேக்ஸ்பியரை இவ்வாறு குறை கூறலாமா?” என்று ஒருவர் கேட்டார்.

“இந்த உண்மையை ஆராயக்கூடிய திறமை யாருக்கு உண்டோ, அவரிடமே இதைக் கேட்கவேண்டும். அப்படிப் பார்த்தால், இங்கிலாந்தின் மிகச் சிறந்த அறிவாளியிடம் செல்ல வேண்டும். ஆனால், அத்தகைய அறிவாளி நான்தான்!” என்றார் ஷா.


மலர்களைக் கொய்வதா?

ஷாவின் இல்லத்தில் மலர்களோ, மலர்கள் வைக்கப்பட்ட கண்ணாடி ஜாடிகளோ அங்கே காணப்படவில்லை.

“ஷாவைக் காணவந்த ஒருவர், மலர்களின் மீது உங்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு எனக் கேள்விப்பட்டேனே?” என்று கேட்டார்.

“உண்மைதான்! குழந்தைகளிடமும் எனக்கு ஆசை தான். அதற்காகக் குழந்தைகளின் தலைகளைக் கொய்து அலங்கார ஜாடிகளில் வைத்து அழகுபடுத்த வேண்டும் என்பது இல்லையே! என்று பதில் அளித்தார் ஷா.


அறிவின் வேலை எது?

“உண்மையான அறிவின் வேலை அனைத்தும் நகைச்சுவையுடன் கூடியதே! என்பது ஷாவின் கருத்து.