பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

69


உறுதியான கருத்து

“அரசியல் சுதந்திரத்தைவிட பொருளாதார சுதந்திரத்தையே ஷா அதிகமாக வற்புறுத்துகிறார். பொருளாதார சுதந்திரம் இல்லாமல் உண்மையான ஜனநாயகம் இல்லை. சமூகத்தில் எல்லோருக்கும் சம வருமானம் இருக்க வேண்டும். பல வகுப்பினருக்கிடையே திருமணம் அப்போது சாத்தியமாகும். கலப்பு மணத்தால் பிறக்கும் சந்ததிகள் ஆரோக்கியமாக இருக்கும். நாட்டின் ஆட்சி முறையில் ‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக’ப் பங்குகொள்ளும்வரை அமைதியான வாழ்வு என்பது உலகில் சாத்தியமே இல்லை. சமூக வாழ்வில் ஆண் பெண் உறவுகளில் பூரண சமத்துவம் நிலவ வேண்டும். திருமணம் என்பது மாற்ற முடியாத மதச்சடங்காக - பிரிக்க முடியாத பந்தமாக இருக்கக் கூடாது, திருமண ரத்து உரிமை இருக்க வேண்டும்.”


நிகழ்காலமே பிரச்சினை

“நான் பல காலங்களைப் பற்றியும் எழுதுகிறேன். ஆனால், நிகழ்காலத்தைத் தவிர வேறு எந்தக் காலத்தைப் பற்றியும் நான் கற்பதில்லை. அந்த நிகழ்காலத்தையே இன்னும் நன்றாகக் கற்றுத் தேர்ச்சி பெறவில்லை. அதுவே என் வாழ்நாளில் நான் கற்றுத் தேற முடியாததாக இருக்கிறது.”